gp.vk;.vk;.V.fhju;
பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட் .ஏ.எச்.ரகுமான் தெரிவித்தார் .
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நிஸாம் காரியப்பர் தலைமையில் வியாழக் கிழமை (16) மாலை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே ரகுமான் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார் .
அவரங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டிட்ட வேட்பாளர் பட்டியலில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினரும் ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருமே தெரிவுசெய்யப்பட்டார்கள்
2015 ம் ஆண்டு நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரவேசம் பிரதானமாக காணப் படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் பெரும் பான்மை சமுகத்தை சேர்ந்த மூவர் போட்டி இடுகின்றனர் . போட்டியிடும் முவரும் ஒத்து தேர்தல் களமிறங்கினால் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்படும் என கூறினார். அதைதான் அவர்கள் செய்வார்கள் என உறுதியாக கூற முடியும் .
முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியின் கீழ் செயல்படும்போது மாத்திரமே அம்பாறை மாவட்டத்தில் இந்த தேர்தலிலோ அல்லது இனிவரும் தேர்தல்களிலோ முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் எனக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய றஹ்மான் கல்முனை மாநகர சபையின் முதல்வர் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக பெயர் உள்வாங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது, ஆதலால் பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் முதல்வர் ஆசனத்தில் அடுத்த மாதம் அமர்வுக்கு வரமுடியாது போய் விடலாம் ,வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் தெரிவித்த அவர் கடந்த 2004 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்னை தேசிய பட்டியலில் போட்ட மாதிரி இல்லையே எனக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய றஹ்மான் எனது இறுதி சபை அமர்வாகவும் இன்று இருக்கும் என்று நம்புகிறேன் சில வேளை அவ்வாறு இல்லாமலும் போகலாம் ஏனெனில் சில நாட்களுக்குள் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது அதாவது இந்த தேர்தலில் எனது தனிப்பட்ட விடயம் தொடர்பில் சில நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து கௌரவ உறுப்பினர்களான நபார் அமீர் பிரதி மேயர் அப்துல் மஜீத் அவர்களும் உரை நிகழ்த்தினார்.