அஹமட் இர்ஸாட்
மலர்ந்திருக்கும் நோன்புப் பெருநாள் எம் அனைவருக்கும் நல்வாழ்வைக் கொண்டு வர வேண்டும்.ஏழை மக்களின்துன்பங்களை நீக்க வேண்டும்.இன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்புமாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமானபெரோஸா முஸம்மில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு,
மலர்ந்திருக்கும் நோன்புப் பெருநாள் எம் அனைவர் மத்தியிலும் புது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.நல்வாழ்வைக்கொண்டு வர வேண்டும்.எமது மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
நோன்பு முழுவதும் பசித்திருந்து-விழித்திருந்து நற்காரியங்களைச் செய்த அந்த மக்களின் செயல்களை அல்லாஹ்ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நற்கூலியை வழங்க வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனைசெய்ய வேண்டும்.
ஏழை மக்களின் வாழ்வு செழிக்க வேண்டும்.அவர்களின் வாழ்வை மேம்படுத்த-ஏழைச் சிறார்களின் கல்விக்கு உதவஇந்தப் புனித தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.
இந்த நாட்டில் நிலையான நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்றும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் இந்தப் புனித தினத்தில் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக.-எனத் தெரிவித்துள்ளார்.