அரசியலின் ஊடாக பணம் சம்பாதிப்பதோ அல்லது வேறு எந்தத் தேவைகளை நிறைவேற்றுவதோ எனதுநோக்கமல்ல : பெரோசா முசம்மில் !

 

unnamed_Fotor

அஸ்ரப் ஏ சமத்

”கொழும்பு மாவட்ட மக்களுக்கு நான் ஆற்றிவரும் சேவைகளை மேலும் அதிகரிப்பதற்காகவே அரசியலுக்குள்நுழைந்திருக்கின்றேன்.அரசியலின்  ஊடாக பணம் சம்பாதிப்பதோ அல்லது வேறு எந்தத் தேவைகளை நிறைவேற்றுவதோ எனதுநோக்கமல்ல.சேவை ஒன்றே எனது நோக்கம்.”

இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவரும்  அக்கட்சியின்கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான பெரோசா முசம்மில் தெரிவித்துள்ளார்.

முசம்மில் பவுண்டேசன் மற்றும் காந்தா சவிய ஆகிய அமைப்புகளால் கொழும்பில் உள்ள மூவின மக்களுக்கும் இலவசமாக கற்றல்உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டன.

b_Fotor

அந்நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களின்  துயர் துடைக்கும்பணியை நான் நெடுங்காலமாகச் செய்து வருகின்றேன்.அந்த மக்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காது இறைவனுக்காகவே நான்இதைச் செய்து வருகிறேன்.

இந்த நிலையில்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.நான் முன்னெடுத்துச்செல்லும் சேவையை  அங்கீகரிப்பதாகவே  இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.எனது சேவைகளை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தஅரசியல் பிரவேசம் உதவும் என்று நான் நம்புகிறேன்.

a_Fotor

அரசியலைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கம் எனக்கில்லை.அதற்கான தேவையும் இல்லை.மரணிக்கும்வரை மக்களுக்குசேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம்.அரசியலில் நுழைந்தாலும் நுழையாவிட்டாலும் எனது சேவை தொடரும்.

இந்த நிலையில் எனக்குக் கிடைத்திருக்கும் அரசியல் பிரவேச வாய்ப்பு எனக்குக் கிடைத்த வாய்ப்பல்ல.கொழும்பு மக்களுக்குக்கிடைத்த வாய்ப்பாகும்.கொழும்பு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகும்.இந்த வாய்ப்பைநாம் நல்லமுறையில் பயன்படுத்துவோம்.என்றார்.

c_Fotor