எம்.ஐ.சம்சுதீன்
கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்த போதை ஒழிப்பு சம்மந்தமான கருத்தரங்கு 2015-07-14 ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் பிரதம அதிதியாக கலந்து சிறப்புரையாற்றினார்.
கல்முனை பொலிஸ் பிரிவில் மாதாந்தம் 30லட்சம் சிகரட்டுக்கள் விற்கப்படுவதாகவும் உலகில் புகை பிடித்தலின் காரணமாக சுமார் 6மில்லியன் மக்கள் மரணிப்பதாகவும் புகைபிடிக்காத 60 ஆயிரம் பேர் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஏனைய போதைப்பொருள் பாவனையை விட புகைத்தல் பாவனையானது மிகக் கொடூரமானது என்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தெரிவித்தார்.
போதை மற்றும் புகைத்தலற்ற செழிப்பான கிராமத்தினை கட்டியெழுப்புவது தொடர்பான செயலமைவு சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநேகும சமூக அபிவிருத்தி மன்றத்தினதும் கல்முனை பொலிஸ் நிலையத்தினதும் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை திவிநேகும முகாமையாளர் எஸ்.றிபாயா,பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் உள்ளிட்டோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.