அஹமட் இர்ஸாட்:- தமீழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் பிரிக்கப்பட்டு அவரினை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நீங்கள்தான் தரகர் வேலை பார்த்ததாக பரவலான குற்றச்சாட்டானது தமிழ் சமூகத்தினாலும், அரசியல் பிரமுகர்களினாலும் உங்கள் மீது சுமத்தப்படுவது சம்பந்தமாக நீங்கள் அவர்களுக்கு எதனைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
இது ஒரு முக்கியமான விடயமாகும். 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தார். அதனடிப்படையில் அர்த்தமுள்ள தீர்வை அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை நோக்கிவர வேண்டும், இனப்பிரச்சனைக்கு அர்த்த புஸ்ட்டியான அர்த்தமுள்ள தீர்வினை காண வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகவே அவை இருந்தது. அப்பொழுது விடுதலை புலிகள் தங்களது ஆயுதங்களை களைந்து விட்டு சமாதானத்துக்கு வந்தனர். உலக நாடுகளின் கண்கானிப்பிலே அரச்சாங்கமும் விதலைப் புலிகளும் அர்த்தமுள்ள பேச்சுவார்தையின் மூலம் ஒரு இனத்துக்கான விடிவு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் கரிசனை காட்டப்பட்ட காலமகவும் அன்றைய காலம் காணப்பட்டது.
அந்த நேரத்தில்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிழக்கின் தளபதியாக இருந்த கருணா அம்மானை அம்பாறை, மட்டகளப்புக்கான அரசியல் தளபதியாக நியமித்து வெளிநாடுகளில் நடைபெற்ற அனைத்து அரசியல் மற்றும் சமாதானம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் களந்து கொள்ளச்செய்தார். நான் அந்த நேரத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகவும் முக்கிய பொறுப்பினை வகித்து வந்தேன். அந்த வகையில் இடம்பெற்ற பேச்சுவார்தை நேரங்களில் எனக்கும் பாரிய பங்குகள் வழங்கப்பட்டிருந்தன. அதாவது மீண்டும் யுத்தமற்ற நிலைமை உறுவாக்கப்பட்டு மக்கள் சகஜமான வாழ்வினை வாழ்ந்து சுமூகமான முறையில் தங்களது மீன்பிடி, விவசாயம், மற்றும் இன்னோரன்ன அத்தியவசிய தேவைகளை சுதந்திரமாக செய்துகொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு அடிக்கடி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களாக கேனல் கருணா அம்மான், கரிகாளன், கெளசல்யன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். அந்தவைகையில் உலகலாவிய ரீதியிலும் விடுதலைப்புலிகள் சமாதான பேசுவார்த்தைகளில் ஈட்டுபட்டு வந்ததன் பலனாக சமாதன பேரவை அமைப்பானது உலக நாடுகளின் மேற்பார்வையில் கொழும்பிலும் கிளிநொச்சியிலும் தங்களது காரியாலையங்களை அமைத்து இருதரப்பு சமாதான நடவடிக்கைகளை கண்கானித்து வந்தது.
அந்தவகையில் அப்பேரவையின் பணிப்பாளராக பேனார்ட் குணத்திலக்க செயப்பட்டதோடு தற்போதைய கிழக்குமாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டொ அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார். இவர்களுடன் எல்லாம் பல பேசுவார்த்தைகளை மேற்கொண்டுதான் அப்பொழுது கிழக்கு மாகாணத்திலே பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தோம். மக்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த முக்கியமான வீதிகளை எல்லாம் மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தோம். அதே போன்று முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் விவசாயம், மீன்பிடி, காணி போன்றவைகளில் பல முரண்பாடுகளும், பிரச்சனைகளும் உறுவான பொழுது நாங்கள் முன்னின்று சுமூகமான சமாதான நிலைமையினை உறுவாகுவதற்கு முக்கிய பங்காற்றினோம்.
இந்த நிலையில் நாங்கள் வடகிழக்கில் சமாதானத்துடனான அரசியல் சுமூக நிலைமை உறுவாக்கப்படல் வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி பேச்சுவார்த்தை மூலமாகத்தான் அர்த்தமுள்ள நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கில் உலநாடுகளின் கண்கானிப்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தபடியினால் விடுதலைபுலிகளும் அரசியல் ரீதியாக முக்கியமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் சமாதான பேசுவார்த்தையில் அதிக ஈடுபாடுடன் பங்களிப்புச் செய்து வந்தனர். நாங்கள் விடுதலைபுலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவின் தலைமைகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தகளின் பலனாக கிழக்கு மாகணத்தின் பொலன்னறுவை மாவட்டதிலுள்ள வெளிக்கந்தையிலிருந்து மட்டக்களப்பு வரையுமான ரெயில் பாதையானது பல ஆண்டுகளுக்கு பிற்பாடு புணநிர்மானம் செய்யப்பட்டு மீண்டும் ரெயில் சேவையானது மக்களின் இயல்பு வாழ்க்கைகக்காக துறந்து விடப்படிருந்தது..
இவ்வாறு பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் ஒஸ்லோவில் சென்று கொண்டிருந்த நிலையில் புரிந்துணர்வு சம்பந்தமாக அதன் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறிவிக்காமல் கருணா அம்மானின் ஆலோசனைப்படியும் தமிழ் செல்வனின் விருபத்தின் படியிலும் இந்தியாவில் இருக்கின்ற பெடரல் அரசியல் அதிகார பரவலாக்கள் திட்டத்துக்கு அமைய பேச்சுவார்த்தைகளின் முன்மொழிவுகளை பாலசிங்கம் ஆராம்பிதார் என ருத்தகுமார் புரளி ஒன்றினை எழுப்பியதினால் அது பரவலாக விமர்சிகப்பட்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு பிற்பாடு கிளிநொச்சியில் பிரபாகரணை கருணா அம்மான் சந்திக்கச் சென்ற வேலையில் பிரபாகரணினால் கருணா அம்மான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு நீயும் வரலாற்றில் ஓர் மாத்தையாவாக இடம்பிடிக்க விருப்புகின்றீரா என்ற கேள்வியும் பிரபாகரனினால் கருணா அம்மானை பார்த்து தொடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பல வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாகவும், பொட்டு அம்மானுக்கும், கருணா அம்மானுக்கு இடையில் இவ்விடயம் சமப்ந்தமாக பல வாய்தர்க்கங்களும் பிரச்சனைகளும் உறுவாக்கப்பட்டதன் விளைவாக பிளவுகள் அவர்களுக்குள்ளேயே உறுவாக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பிரபாகரணுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தையானது விடுதலைப் புலிகளின் உட்பூசல்களினால் இடைநிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் சார்பாக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு விதலைபுலிகளை மீண்டும் சமாதான மேசைக்கு மீண்டும் கொண்டு வர முயற்சித்த நிலையில்தான் அந்தகால கட்டத்திலே ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் பேசுவார்த்தைகள் மூலமாக பிரதமர் ரணில் தீர்க்கமான முடிவினை அடைந்து விட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே தொடர்ந்து ஆட்சியினை கைபற்றும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முக்கிய அமைச்சுக்களான பாதுகாப்பு, உட்பட ஏனை சில முக்கிய அமைசுக்களை அவருடைய நிறைவேற்று அதிகாரத்தினை பயண்படுத்தி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவந்தற்கு பிற்பாடு 28.01.2004ம் ஆண்டு பாராளுமன்றத்தினையும் களைத்து விட்டார்.
ஆகவே பாராளுமன்ற களைப்பு ஏற்பட்ட அந்த சூழ்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக விடுதலைப்புலிகளுடன் ரணில் விக்ரமசிங்க செய்து கொண்டுள்ள சமாதான பேச்சுவார்த்தையானது இந்த நாடு இரண்டாக துண்டாப்படும் என்றும் பேச்சுவார்த்தையனது விடுதலைப் புலிகளுக்கு முற்றுமுழுதாக சாதகமான பேச்சுவார்த்தையாகவும் அமைந்துள்ளது என்ற பேச்சுக்களாகவே காணப்பட்டது. அதற்கு மேலும் வலுச்சேர்கும் முகமாக ஜாதிக கெளஉறுமய, ஜேவிபி போன்ற கட்சிகளும் சந்திரிகாவுக்கு சார்பாக களத்தில் குதித்திருந்தன. அந்த நேரத்தில்தான் நாங்களும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தோம். அந்த நிலையில் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும், தமிழ் அரசுக் கட்சியானது விடுதலை புலிகளின் கிழக்கின் அரசியல் தலைவர்களான கருணா அம்மான், கரிகாளன் போன்றவர்களின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்திய அதேநேரத்தில் வடமாகாணத்தில் பிரபாகரனின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழ் செல்வன், புலித்தேவன், பொட்டு அம்மான் ஆகியோரின் நேரடி கண்கானிப்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதுமாக புலித்தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த என்னை முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையின் படி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடமால் இருக்கும்படியான கோரிக்கைக்கு அமைவாக நான் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்கப்பட்ட நிலையில் என்னை ரணில் விக்ரமசிங்க தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்கியிருந்தார். அவ்வாறான நிலையில் என்னுடன் ஐக்கிய தேசியக் நீண்டகாலமாக கட்சியில் போட்டியிட்ட சக நண்பர்களான ராஜன் சத்தியமூர்த்தி கருணா அம்மானின் ஆசியுடன் தமிழரசு கட்சியில் போட்டியிட இன்னொமொரு நண்பரான ஆரையம்பதியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் சுந்தரமூர்த்தி ஐயா என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டார். இவ்வாறு இருக்கையில் விடுதலை புலிகளின் பொட்டு அம்மானின் அணியைச் சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி ஐயா மீது 2004.02,27ம் திகதி துப்பாக்கி சூடு நடத்தியதனால் சுந்தரமூர்த்தி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் அணியினரே சுட்டதாக பி.பி.சி வானொலிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்து ஒரு மணித்தியாலத்துக்குள்ளே மீண்டும் வைத்தியசலைக்குள் சுடப்பட்டு சுந்தரமூர்த்தி கொல்லப்பட்டிருந்தார்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து கருணா அம்மான் மிகவும் ஆத்திரமடைந்திருந்தார். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடக்கின்ற இந்த காலகட்டத்தில் இவர்கள் வடக்கிலிருந்து வந்து இவ்வாறான நடவடிகைகளில் ஈடுபடுவதானது ஏற்றுக்கொள்ளபட முடியாத விடயமாக இருப்பதனாலும், ஜனநாயக ரீதியில் கருணா அம்மாணின் அணியினர் தங்களது நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்புச் செய்கின்ற நிலையில் இவ்வாறு முன்னாள் அதிபர் சுந்தமூர்த்தி கொலை செய்யப்பட்டதை கருணா அம்மான் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தநிலையில் வன்னியைச் சேர்ந்த பொட்டு அம்மானின் உறுப்பினர்களுக்கும் கருணா அம்மானின் உறுப்பினர்களுகும் மிகவும் உச்சக் கட்டத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
இதைத் தொடர்ந்து தேர்தல் நெருங்கிய நிலையில் அதாவது 2004.03.03ம் திகதி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கருணா அம்மான் தான் இன்றிலிருந்து விதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து இருந்து வெளியேறுவதாகவும், புலிகள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் முறன்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள எங்களுடைய ஆதரவாளர்களையும் உறுப்பினர்களையும் கொலை செய்து வருக்கின்றனர். அது சம்பந்தமாக அவர்களுடன் காரசாரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் என்னையும் அவர்கள் கொலை செய்ய முயற்சித்த வேலையில் அவர்கள் என்னிடம் துரதிஸ்டவசமாக மாட்டிவிட்டனர். அத்துடன் அவர்கள் சார்பானவர்களை பிரித்து தான் வன்னிக்கு அனுப்பிவிடாதாகவும் கூறிய கருணா அம்மான் இவ்விடயத்தினை உங்களுடைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறுமாறு கொழும்பில் இருந்த என்னிடம் வேண்டிக்கொண்டார்.
தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ள அந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தென்னிலங்கையில் மேற்கொள்கின்ற பிரச்சாரங்களில் மோதல் தவிப்பு எனப்படும் விடயத்தில் விடுதலைப்புலிகளோ, இராணுவத்தினரோ, தென்னகத்திலுள்ள இளைஞர்களோ, வடகிழக்கிலுள்ள இளைஞர்களோ கொலை செய்யப்படவுல்லை, பாதிக்கப்படவுமில்லை. எனவே இந்த சாமாதான உடன்படிக்கைதான் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தினையும், தீர்வினையும் ஏற்படுத்தும் என்ற பிரச்சாரத்தினை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்து செல்கின்ற நிலையில் இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கிடையில் ஏற்படுகின்ற பிளவானது எங்களது பிரச்சரத்திலே அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தி விடுமோ என்ற அடிப்படையில் இப்பிரச்சினையினை பூதாகரமாக்காமல் வன்னிப்புலிகளுடன் ஒற்றுமையினை கடைப்பிடிக்குமாறு தலைவர் ரணில் விக்ரமசிங்க கருணா அம்மானிடம் கூறுமாறு என்னிடன் பணித்தார்.
அதனடிப்படையில் நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற சமாதான நடவடிக்கையானது இடை நடுவில் இவர்களுடைய பிளவினால் இடைநிறுத்தப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக நாங்கள் மட்டக்களப்பில் உள்ள சமாதான பேரவையில் உள்ள உறுப்பினர்களையும், சிவில் சமூகத்தை சேர்ந்த பெரியவர்களையும் அனுகி ஒரு குழ்வினை ஏற்பாடு செய்து சமரசம் செய்வதற்காக அவர்களை வடக்கிற்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அங்கு சென்ற நேரத்திலோ நாங்கள் அனுப்பிய சமாதான குழுவினை வன்னியை சேர்ந்தவர்கள் காரசாரமாக விமர்சித்தும் தகாத வார்த்தைகளால் தூற்றியும் அனுப்பிவைத்தனர். இதன் பொழுது கருணா அம்மான் என்னிடன் சொன்னார் பார்த்தீர்களா அன்னா நீங்கள் நல்ல முறையில் சமாதானத்துக்காக முயற்சித்தும், எங்களுக்கிடையில் பிளவு ஏற்படக்கூடாது என நினைத்து செயற்படுக்கின்ற நிலையில் வடக்கு புலிகளும், வடமாகாண மக்களும் கிழகு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இடமளிக்க மாட்டார்கள் அத்தோடு, கிழக்கில் உள்ள முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழலாம். ஆனால் யாழ்பாணத்து மக்களுடன் வாழ முடியாது என்று மிகவும் காரசாரமான கருத்தினை கருணா அம்மான் என்னிடம் முன்வைத்தார்.
இந்த நிலையில் ஒஸ்ரின் பெர்னாண்டோ, பேனாட் குணதிலக்க சமாதனா பேரவையின் உறுப்பினர்கள் அடங்களாக ரணில் விகரமசிங்கவின் வேண்டு கோளுக்கினங்க வன்னிக்குகுச் சென்று சமாதான ஒப்பந்தத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் முகமாக உங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவினை சமாதானமான முறையில் முடித்துக்கொள்ளுமாறு வேண்டியதோடு., அந்த வேண்டுகோளினை கருணா அம்மானிடமும் சமர்பித்தோம். ஆனால் 2004ம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முதல் மட்டகளப்பின் முன்னாள் மேயரான சிவகீதா பிரபாகரணின் தந்தையான ராஜன் சத்திய மூர்த்தியை அவருடைய வீட்டில் வைத்து பொட்டு அம்மானின் அணியினை சேர்ந்தவர்கள் துப்பாக்கியினால் கொலை செய்துவிட்டுச் சென்றனர். இதனால் மட்டக்களப்பு நகரானது மிகவும் பதட்டமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அமைதியான அன்னை பூபதியின் கடற்கரை பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த ராஜன் சத்திய மூர்த்தியின் உடலினை வன்னிப்புலிகள் மீண்டும் தோண்டி எடுத்து அவமானப்படுத்தியதன் விளைவும் மட்டக்களப்பில் மிகவும் சங்கடமான சூழ்நிலையை ஏற்பட காரணமாய் அமைந்து விட்டது. அதனோடு சேர்த்து தேர்தல் அதிகாரயாக இருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேலையில் வன்னிப்புலிகளினால் சுடப்பட்டார்.
இவ்வாறான சம்பவங்கள் மட்டக்களப்பில் தொடர்ந் தேர்ச்சியாக வன்னிப்புலிகளினல் மேற்கொள்ளப்பட்டமையினால் மட்டக்களப்பில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துக்கொடே சென்றது. அந்த நிலையில் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சி தோல்வியத்த தழுவி கொண்டதினால் சந்திரிக்காவின் புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சராக கடையேற்ற லக்ஸ்மன் கதிர்காமர் அவருடைய செயலாளராக இருந்த பேனார்ட் குணத்திலக்க மூலம் என்னை அனுகி நாங்களும் சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்காமல் கருணா அம்மான் விதலைப்புலிகளை விட்டு வெளியில் வருவாரானால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற கருத்தினை கருணா அம்மானிடம் தெரிவிக்குமாறு வேண்டினார்.
அந்த வகையில் எந்த கட்சியாக இருந்தாலும் இந்த நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் செயற்பட்டதன் காரணமகவும், வடகிழக்கில் உள்ள அப்பாவி தமிழ் இளைஞர்களின் உயிர்கள் காவுகொடுக்கப்பட கூடாது என்பதற்காகவும் முயற்சிக்கின்றேன் எனக் கூறினேன். அதற்குப் பிற்பாடு கருணா அம்மானுடன் கிழக்கில் இரண்டாவது தளபதியாக இருந்த றமேஸ் என்பவர் வன்னியில் இருந்து என்னோடு தொடர்பினை ஏற்படுத்தி தான் கருணா அம்மானின் சிஸ்யனாக இருந்தபடியினால் பிரச்சனைகளை அனைத்தையும் நன்கறிந்தவன் என்ற ரீதியில் கொள்கையளவில் கருணா அம்மானின் பிரச்சனையினை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் எனது மனைவி சூசை எனப்படும் கடற்புலிகளின் தளபதியின் தங்கை என்ற படியினால் வன்னிக்கு செல்ல ஏற்பட்டதாகவும், அங்கு தன்னை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்துக்கான தளபதியாக நியமித்தாகவும் தெரிவித்ததோடு கருணா அம்மான் எங்கள் இயக்கத்தினை விட்டு பிரிந்தாலும் சகோதர படுகொலைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளபடியினால் நாங்கள் அவருடன் மோதுவதற்கு விருப்பவில்லை. அதனால் மெளலானாவினால் மட்டுமே கருணா அம்மானை ஆறுதல் படுத்தமுடியும் என்ற வார்தை பிரயோகத்தோடு அவருக்கு பொது மண்ணிப்பு வழங்கி உடனடியாக கருணா அம்மான் விருபுகின்ற நாட்டிற்கு அவருடைய குடும்பத்தினரோடு நாங்கள் அவரை அனுப்பி வைப்பதற்கு தயாராக உள்ளோம் அதனை எங்களுடைய தேசிய தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற செய்தியினை கருணா அம்மானிடம் எத்திவைக்குமாறு தமிழ் செல்லவனும் தொலைபேசியில் இருக்கத்த நிலையில் வேண்டிக் கொண்டனர்.
இச்செய்தியினை நான் கருணா அம்மானிடம் எடுத்துக் கூறிய வேலையில் கருணா அம்மான் வடக்கினை சேர்ந்தவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள். அவர்களுக்கு இந்த மண்ணின் மகிமை தெரியாது என்றும், றமேசின் மணைவிக்காக அவர் வன்னிக்கு சென்று விட்டார், வடக்கினை சேர்ந்தவர்கள் எனக்கு பொது மண்ணிப்பு வழங்கி தான் உயிர்வாழத் தேவையில்லை என்றும் எனது, மண்ணுக்காகவும்,மக்களுக்காக்வும் உயிரை கொடுப்பதினை தான் பெருமையாக நினைக்கின்றதாக கூறி கருணா அம்மான் வன்னித்தலைமைகளின் வேண்டுகோளினை நிராகரித்து விட்டார்.
யுத்தி நிறுத்தகாலத்தில் நிராயுதபானிகளாக அரசாங்கத்தின் உதவியோடு விடுதலைப்புலிகள் தாங்கள் விருப்பிய இடத்திற்கு பயணிக்கலாம் என்ற சரத்துக்கள் காணப்பட்டாலும் வன்னிப் புலிகள் ஆயுதங்களோடு மட்டக்களப்பு வாகரை கடற்கரை யோரத்திற்கு வருகை தந்து தீடீரென கருணா அம்மானின் அணியினரை தாக்கத்தொடங்கினர். அந்த நேரத்தில் இராணுவமானது இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டு அழிந்து போகட்டும் என வேடிக்கை பார்க்கின்றது என்ற காரணத்தினால் தனது அணியினைரை கருணா அம்மான் மட்டக்களப்பு கொழும்பு பிரதாண வீதிக்கு அடுத்த பக்கத்தில் உள்ள தொப்பிக்கலை பக்கதிற்கு கொண்டு வந்ததாக கூறினார். அத்தோடு பாடசலை பிள்ளைகளை கிழக்கு மாகாணத்தில் கூடுதலான முறையில் வன்னிப்புலிகள் இயக்கத்தில் இணைதுள்ளமையினால் அவர்களை தான் விடுவிக்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு நீங்கள் செய்ய நினைக்கும் விடயமானது மிகச் சிறந்த விடயம் எனக் கூறிய நான் அவ்வாறு செய்யும் நீங்கள் யுனிசெஃப் நிறுவனத்தை சாட்சியாக வைத்து சிறுவர்களை கையளிக்குமாறு வேண்டிக்கொண்டேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளில் இருந்த ஏராளமான சிறுவர்களை விடுவித்ததனை அப்பொழுது இலங்கையில் இருந்த அனைத்து வெளிநாட்டு தூதரகங்களும் பாராட்டியிருந்தன.
இவ்வாறு இருக்கையில் 12.04.2004ம் ஆண்டு என்னுடன் தொடர்பினை ஏற்படுத்திய கருணா அம்மான் தான் கொழும்பு வர விரும்புவதாகவும், மட்டக்களப்பில் உள்ள நிலைமைகளைப் பற்றி வெளிநாட்டு தூதரகங்களுக்கு சில உண்மைகளை விளங்கப்படுத்த விரும்புவதாகவும், அதற்காக தனக்கு ஒரு வாகனத்தை ஏற்படு செய்து தருமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு நான் சொன்னேன் விதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் மிக அதிகமாக காணப்படுகின்றபடியினால் உயிராபத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. ஆகவே நான் கொழும்பு செல்ல உள்ளபடியினால் உங்களை எனது வாகனத்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்கின்றேன் எனக் கூறினேன். அதற்கு ஆச்சரியப்பட்டு பெருமகிழ்ச்சி அடைந்திருந்த கருணா அம்மானிடம் நீங்கள் சமாதானத்தை விரும்பும் அதேவேலையில் வன்னியை சேர்ந்தவர்கள் சமாதானத்தின் பக்கம் இல்லாததினால்தான் நான் உங்களை கொழும்புக்கு அழைத்துச் செல்லும் முடிவினை எடுத்துள்ளேன் எனக் கூறி நான் கருணா அம்மானை கொழும்புக்கு அழைத்துச் சென்றேன்..
நான் கொழும்புக்கு கூட்டிவந்தது மட்டுமல்லாமல் லக்ஸ்மன் கதிர்காமரும் பேர்னாட் குனத்திலக்கவும் சமாதானத்தினை மேற்கொள்வதை கருத்தில் கொண்டு உங்களுக்கான பாதுகாப்பினை அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தேன். அதற்கு கருணா அம்மான் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றால் எந்த விடயத்திலும் தலையிடாமல் அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதற்கு தயார் என தெரிவித்தார். அதனடிப்படையில் நான் கருணா அம்மானை லக்ஸ்மன் கதிர்காமரிடம் கையளித்தேன்.
இதுதான் உண்மையில் எனக்கும் கருணா அம்மானுக்கும் இடையில் நடைபெற்ற விடயமாகும். கருணா அம்மான் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவதற்கு நான் காரணம் என்று சொல்லப்படுக்கின்ற விடயமானது உண்மைக்கு புறம்பான விடயமாகும். இதனை வடக்கு வாழ் மக்களும் என்னை விமர்சிக்கின்றவர்களும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அத்தோடு அன்று நான் கிழக்கில் இருந்து கருணா அம்மானை கொழும்புக்கு அழைத்துச் சென்றிருக்காதிருந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பலிக்காடாக்கப்பட்டிருக்கும் என்பது இன்று பேசப்படும் உண்மை வரலாறாக நிச்சயமாக இருந்திருக்கும் என்பதில் எவரிடமும் இரண்டாம் கருத்திருக்க இடமில்லை. ஆகவே வடக்கில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி கிழக்கில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி அனைத்து மக்களும் உண்மையில் என்ன நடந்தது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நான் இறுதியாக கூறும் கருத்தாகும்.