இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றி, பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், அதற்கு தற்போது அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் படித்து முடித்த பிறகு மேலும் அங்கு தொடர்ந்து தங்கும் பொருட்டு விசாவிற்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகள் அல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் பகுதி நேரம் பணிபுரியும் உரிமையை இழக்கிறார்கள்.
இச்சலுகையைப் பயன்படுத்தி குடியுரிமைக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் இங்கிலாந்தில் உள்ள வேலை வாய்ப்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தவிர்ந்த பிற வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் சீரமைப்பு செய்யப்படவுள்ளது.
இங்கிலாந்திற்கு கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் 1 இலட்சத்து 21 ஆயிரம் பேர் சென்றிருந்தனர் எனவும் அவர்களில் 51 ஆயிரம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளதாகவும் இங்கிலாந்து உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.