மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தனர்.
சதுப்புநிலத்தை நிரப்புவதற்காக அந்நிலத்தை சூழ குடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கி 64 மில்லியன் ரூபா பணத்தை கோரியமை மற்றும் அத்தொகையிலிருந்து 15 மில்லியனை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொட்ர்பில் முதலமைச்சரு்க்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
எதர்வரும் 20 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரவிற்கு சென்று வாக்குமூலம் அளிக்குமாறு கோட்டை நீதவான் மேல் மாகாண சபை முதலமைச்சருக்கு உத்தரவிட்டு்ளளார்.
ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு மிதான விசாரரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விடுக்கப்பட்ட பிடியாணை ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.