இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை வழங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்கி ஒபாமா கையெ­ழுத்­திட்டார்!

images

இலங்­கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை வழங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்கி அதற்­கான ஆவ­ணத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா கையெ­ழுத்­திட்டார் என வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே தெரி­வித்தார்.

2013 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி. வரிச் ­ச­லுகை நிறுத்­தப்­பட்டு தற்­போது இரண்டு வரு­டங்கள் கழிந்து மீளக் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பில் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே இதனை தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­க­ளுக்கு அமெ­ரிக்கா ஜி.எஸ்.பி.வரிச் சலுகை வழங்கும். இவ்­வாறு 122 நாடு­க­ளுக்கு இச் சலுகை வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பட்­டி­யலில் இலங்­கையும் உள்­ளது. 5000 பொருட்­க­ளுக்கு (அமெ­ரிக்­கா­வுக்கு) ஏற்­று­மதி செய்யும் பொருட்­க­ளுக்கு இச் சலுகை வழங்­கப்­பட்­டுள்­ளது. இச் சலு­கைக்கு குறிப்­பிட்ட கால எல்லை வரை­ய­றுக்­கப்­படும். அக்­கால எல்லை முடி­வ­டைந்­ததும் அமெ­ரிக்க காங்­கிரஸ் மீண்டும் அக்­கால எல்­லையை புதுப்­பிக்கும்.

இது இவ் வரிச் சலுகை தொடர்­பி­லான நடை­மு­றை­யாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்­கைக்­கான அமெ­ரிக்­காவின் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை நிறுத்­தப்­பட்­டது. இச் சலுகை இலங்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் தங்கம், வெள்ளி, தைத்த ஆடைகள், இறப்பர், பிளாஸ்டிக் உட்­பட பல பொருட்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இச் சலுகை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இரண்டு வரு­டங்கள் கழித்து அமெ­ரிக்க காங்­கிரஸ் இலங்­கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலு­கையை வழங்­கு­வ­தற்­கான தீர்­மா­னத்தை -ஜூன் 27ஆம் திகதி தீர்­மா­னித்­தது.

இத் தீர்­மா­னத்­திற்­கான அனு­ம­தி­ய­ளிக்கும் ஆவ­ணத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா கையெ­ழுத்­திட்­டுள்ளார். ஜூலை (இம் மாதம்) 29 ஆம் திகதி முதல் ஜி.எஸ்.பி.சலுகை எமக்கு கிடைக்கும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்படும்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் நூற்றுக்கு 7 வீதத்திற்கு இது கிடைக்கின்றது.