பாராளுமன்ற தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து ஏற்பாடுகளும் இறுதி தறுவாயை அடைந்துள்ளன!

Unknown

பாராளுமன்ற தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து ஏற்பாடுகளும் இறுதி தறுவாயை அடைந்துள்ளன. இதன்பிரகாரம் இன்றைய தினத்துடன் கட்சியின் வேட்புமனுவுக்கான பணிகள் நிறைவடைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு நேற்றைய தினம் குறைபாடாக காணப்பட்ட பட்டியல் நிரப்பல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் இது குறித்து இறுதி முடிவை கட்சியின் வேட்புமனு தெரிவுக்குழு எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான வேட்புமனு தெரிவுக்குழு கடந்த மாத இறுதியில் கூடி பாராளுமன்றத் தேர்தலுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முக பரீட்சைகளை நடத்தி, 25 மாவட்டங்களுக்குமான வேட்புமனு தயாரிப்பு பணிகளை பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் வேட்புமனு வழங்கலின் போது குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது பல வேட்பாளர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 12 அல்லது 13 ஆம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.