மஹிந்த ராஜபக்சேக்கு மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கினால் அவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லை : சுரேஷ் !

suresh-premachandran-MP1
 முன்னாள் போராளிகளில் சிலரை ஒன்றிணைத்து ஆரம்பமாகியுள்ள புதிய கட்சியானது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களிடம்  தோற்று விட்டார்கள் என்றால் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை தோற்கடித்து  விட்டார்கள் எனும் பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கம் செய்ய தொடங்குவார்கள்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழில்தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 

விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் ஒன்றிணைந்து ஒரு அமைப்பினை உருவாக்கியுள்ளனர். அவர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமது அமைப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு ஆசனங்களை ஒதுக்க வேண்டும் என கோரி திங்கட் கிழமை வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தி இருந்தனர்.

அவர்களுக்கு முன்னைநாள் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் தலைமை தாக்கி இருந்தார் அவர்கள் எம்மிடம் முன்னாள் போராளிகளில் தடுப்பில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட  வேண்டும். தடுப்பில் இருந்து விடுதலையானவர்கள் எதிர்நோக்கு கஷ்ட துன்பங்கள் என்பவை பற்றி கூறி இருந்தார்கள். அவர்கள் கூறிய அந்த கருத்துக்கள் தொடர்பில் எமக்கு எந்த மாற்று கருத்து இருக்கவில்லை.
 
அந்த அமைப்பினர் தொடர்பில் ஏனைய முன்னை நாள் போராளிகள்  தளபதிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அமைப்பில் உள்ள முன்னாள் போராளிகளை பலருக்கு தெரியாது. இவர்கள் எவ்வாறு இந்த அமைப்பை உருவாக்கினார்கள் எனவும் தெரியாது.. இவர்கள் யார் என்பது தொடர்பான சரியான நிலைப்பாடு இல்லை.
 
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த அமைப்பினர் கோரிய வாறு ஆசனங்களை வழங்க மறுத்து விட்டது. அதனால் அந்த அமைப்பினர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தால். அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
 
விடுதலை புலிகளின் கோரிக்கையையே தமிழ் மக்கள் தோற்கடித்து விட்டார்கள் என்ற பிரச்சாரம் வரும் அது நிச்சயமாக தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு உகந்தது அல்ல 
 
எனவே அந்த போராளிகள் இவற்றை விளங்கி கொண்டு செயற்படவேண்டும் நிச்சயமாக அந்த போராளிகள் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். என மேலும் தெரிவித்தார்.

ஊழல் குற்றசாட்டுக்கு உள்ளாகியுள்ள மஹிந்த ராஜபக்சேக்கு மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கினால் அவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 
யாழில்தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 
மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் குற்ற சாட்டுகள் முன் வைக்கப்பட்டு அதற்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றான.
 
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சே தேர்தலில் போட்டியிடுவதற்கு மைத்திரி பால சிறிசேனா அனுமதிப்பார் எனில் அவர் பேசின நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லாது போய் விடும். அத்துடன் பெரும்பாலான சிங்கள மக்கள் மற்றும் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு நல்லாட்சியை உருவாக்குவேன் என வழங்கிய வாக்குறுதி ஏமாற்று வேலையாக போய் விடும். என தெரிவித்தார்.