நிபந்தனை அடிப்படையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக் குழுவுடன் இன்றிரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும், பிரதமர் வேட்பாளராக மஹிந்த அறிவிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரச்சாரப் பணிகளுக்கு தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 20 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு எவ்வாறு வேட்பாளர்களை பகிர்வது என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.