மகிந்தவை கைவிடும் முன்னாள் எம்.பிக்கள்!

images

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த அந்த கட்சியின் 45 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களில் தேர்தலில் போட்டியிட நோக்கில் நேர்முகப் தேர்வில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தவர்களிடம் கடந்த திங்கட் கிழமை முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேர்முக தேர்வுகளை நடத்தி வருகிறது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிட போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த புதன் கிழமை தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களை கொடுத்து பிரதமர் வேட்புரிமையை பெற மகிந்த ராஜபக்ச தயாராகி வந்தார்.

இந்த விடயம் தொடர்பாக பல தரப்பிடம் இருந்த வந்த எதிர்ப்புகளை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் எனவும் கூறியிருந்தார். 

முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை தெரியவந்து கொண்ட, மகிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் வேட்புமனுவை பெற இரகசியமான முறையில் நேர்முக தேர்வுக்கு சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அண்மையில் மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் வெறும் 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.

மகிந்த ராஜபக்சவை ஆதரித்த பலர் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற தயாராகி வருவதாக கூறப்படுகிறது.