பாறுக் ஷிஹான்
புங்குடுதீவு மாணவி அமரர் தியாகி வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இன்று 26.06.2015 இடம்பெற்றது.
பாடசாலைச் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மதகுருமார்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையுடன், தேவாரங்கள், அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அத்துடன் அப்பாடசாலையின் அனைத்து மாணவர்களும் விளக்கேற்றி வணக்கம் செலுத்தினர்.
ஆன்மீகத் தலைவர்களின் ஆத்மா சாந்தி உரைகள் அற்புதமாக அமைந்தன. அவர்களின் வார்த்தைகள் வித்தியா வின் தாயாரையும் சகோதரர்களையும் ஓரளவுக்காவது ஆறுதல் படுத்தியிருக்கும்.
சிறப்பாக ஈழத்துக் கலைஞர்களின் கிளியூர் றமணனின் உருவாக்கத்தில் வித்தியா கீதங்கள் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மனதை உருக்கும் அற்புதமான வரிகளைக் கொண்ட பாடல்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் உணர்வுபூர்வமாக சிந்திக்க வைத்தது.
மேலும் அமரர் வித்தியாவின் உருவப்படம் தாங்கிய நினைவுப் படப்பெட்டியினை சங்கானை லயன்ஸ் கழகம் சார்பாக அதன் தலைவர்கள் வழங்கி வைத்தனர்.