பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட சி.சந்திரகாந்தன் 11.06.2015ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாகனத் தொடரணி விபத்திற்கு உள்ளாகிய கந்தையா சறோஜினிதேவி மற்றும் அவரது ஆறு மாத குழந்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
மிகப் பரிதாபகரமாக தமது வைத்தியசாலை பராமரிப்பு வெலவினைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையினை அவதானித்த சி.சந்திரகாந்தன் தனது மாகாண சபை உறுப்பினருக்கான மாதச்சம்பளத்தில் அரைவாசியினை இவர்களுக்கு வழங்கி வைத்ததுடன் வைத்திய சாலையில் இருந்து வீட்டிற்கு திரும்பியதும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு தாம் முழு உதவியினையும் வழக்குவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேற்படி விபத்தானது புணானையில் இருந்து ஓட்டமாவடிக்கு செல்வதற்காக கொழும்பு வீதியில் பஸ்சிற்காக காத்திருந்த மயிலந்தனை புணானையைச் சேர்ந்த கந்தையா சறோஜினிதேவி எனும் யுவதியும் அவரது ஆறு மாத குழந்தையும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஸீர் ஹாபீஸ்pன் வாகன தொடர் அணியில் சென்ற வாகனத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளானர் என்பது குறிப்பிடத் தக்கது.
மிக ஆபத்தான நிலையில் 11.06.2015ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்;பட்ட இப் பெண்மணியின் மண்ஈரல் அகற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகள் நடைபெற்று வருவதும் விபத்துக்குள்ளான ஆறு மாத குழந்தையின் பார்வையில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.