மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் கரடி ஒன்று விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளது !

11540846_460912074086037_6405660616511892611_n
பாறுக் ஷிஹான்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று (வியாழக்கிழமை) கரடியொன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது.

மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த கரடி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த கரடியை மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டு மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைகளின் பின்னர், மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் குறித்த கரடியின் உடலை கொண்டு சென்றுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதி மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையில் அப்பகுதியில் கரடி போன்ற காட்டு மிருகங்களின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் நேற்றைய தினம் அரிய வகை சிறுத்தை புலியொன்றும் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

10518708_460909297419648_1666031338914432713_n