கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர !

Gota 

 மிக்-27 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உக்ரேனில் இருந்து மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டால், கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.

தரகுப் பணம் பெற்றுக் கொண்டு தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்திருந்தார்.

நான் சொல்வது பொய் என்றால் அவர் எனக்கெதிராக வழக்குத் தொடுக்கலாம்.” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.