நல்லாட்சி தொடர்பான தெளிவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு இருக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் சில சமையலறை குழுக்கள் இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர், தாம் உயிரை பணயம் வைத்து வந்த பின்னரே ரவுப் ஹக்கீம் போன்றவர்கள் அமைச்சரவைக்கு தாமதமாகவே வந்ததாக குறிப்பிட்டார்.
அவர்களுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அந்த தருணத்தில் நாங்கள் எந்தவித விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலுக்கும் தமது அரசியலுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது.
தற்போது, செய்தவறியாத நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் அருமை தெரிகிறது.
இதேவேளை, அந்த சமையலறை குழுவில் உள்ள சிலர் ஜனாதிபதி பதவியை பெறும் எதிர்பார்புடன் இருப்பதாக அமைச்சர் ஹக்கீம் வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, யாருக்கு தான் ஆசையில்லை என கேள்வி எழுப்பினார்.
ரவுப் ஹக்கீம் மதத்தை மாற்றிக் கொண்டேனும் இந்த பதவிக்கு வர ஆசைப்படுவார் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.