இக் கட்டான ஒரு சூழ் நிலை மற்றும் சந்தர்ப்ப வசத்தால் ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவனாகி விட்டதை நாம் எல்லோரும் அறிவோம் சந்தர்ப்ப வசத்தால் தலைவனாகி விட்டால் மட்டும் முஸ்லிகளின் தலைவனாகி விட முடியாது , சந்தர்ப்ப வசத்தால் தலைவன் ஆகியவர்கள் தலைவர்கள் அல்ல முதலில் இதை இதை வரலாறு தெரிந்த சமூகம் உணர வேண்டும்.
முஸ்லிம் காங்கிரசுக்கு விழும் வாக்குகள் எல்லாம் அஸ்ரபின் ஆத்மாவுக்கும் அவரால் அடையாளப் படுத்தப் பட்ட மரச் சின்னத்துக்குமே அன்றி வேறில்லை. ஆகவே ரவூப் ஹக்கீம் அவர்களால் முடியுமானால் வருகின்ற பொதுத் தேர்தலில் சுயச்சையாய் தான் களத்தில் இறங்கி தலைவன் என்ற வகையில் மற்றவர்களை விட மேலதிக வாக்குகளைப் பெற்றுக் காட்டி தான் சமூகத்தின் தலைவன்தான் என்பதை நிருபித்துக் காட்ட முடியுமா ? என்பதே எமது சவால் , அவ்வாறு வாக்குகளைப் பெற்றுக் காட்டின் ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவன்தான் என்பதை சமூகம் முழு மனதாக ஏற்றுக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
மர்ஹும் அஸ்ரப் தன்னை ஒரு சமூகத்தின் தலைவானாக உருவாக்கிக் காட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது . ரவூப் ஹக்கீமால் வென்று காட்ட முடியுமா என்பதே இங்கு சவால் . இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்