இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடனான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு தொடர்ந்து ஆதரவளிக்குமென ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா வலியுறுத்தினார்.
பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிக்கு தமது அரசாங்கத்தின் ஆதரவு இருக்குமென அவர் தெரிவித்தார். ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான கலந்துரையாடலின் போதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.