பாறுக் ஷிஹான்
பேரீச்சம் பழ விநியோகத்தில் ஏற்பட்ட தெளிவின்மை தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அப்துல்லாஹ்வை வினவியதை அச்சுறுத்தல் என வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்தெரிவித்து அரசியல் நாடகம் ஒன்றை நடாத்துவதாக முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் எஸ்.சி முபீன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஊடகங்களில் யாழில் பேரிச்சம்பழ விநியோகத்தில் ஈடுபட்ட அப்துல்லாஹ் என்பவர் தன்னால் அச்சுறுத்தப்பட்டதாக வெளிவந்துள்ள விடயம் குறித்து வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எனக்கும் அப்துல்லாஹ்விற்கும் எவ்வித முன்பகையும் இல்லை.இந்நோன்பு காலத்தில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தது என தெரிவித்திருப்பது முனாபிக் தனத்தை காட்டுகின்றது.உண்மையை திரிபடுத்தி இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றார்கள் .மக்கள் இதன் உண்மை தன்மையை அறிய வேண்டும்.அப்பட்டமான ஒரு அரசியல் நாடகம்.அப்துல்லாஹ்வின் உயர்ச்சிக்காக நான் பல உதவிகளை செய்துள்ளேன்.சூழ்நிலை கைதியாக அவர் உள்ளார்.அத்துடன் தவறாக வழிநடத்தப்பபட்டு இவ்வச்சுறுத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.