பாறுக் ஷிஹான்
நோன்பு தினத்திற்கென யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்கு வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இப்பேரிச்சம்பழங்களை வழங்கிய அமைப்புகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நலனில் அக்கறை மேற்கொண்டு இப்பழங்களை வழங்கி வந்தனர்.
ஆனால் இம்முறை இப்பகுதிக்கென் விநியோகிப்பதற்கென வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் தேவையற்ற முறையில் பலருக்கு வழங்கப்பட்டுள்ளமை ஆதார பூர்வமாக வெளிவந்துள்ளது.
அத்துடன் ஒரு பாடசாலை அதிபரின் ஊடாக 24 ஆசிரியர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாசிரியர் கள் உள்ள மஹல்லாவிற்கும் மறுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கின்ற போது சிலருக்கு பல தடவை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் நல்லிணக்கம் எனும் பெயரில் முஸ்லீம் அல்லாதோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆதாரமே தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள 450க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள்,வைத்தியசாலை பகுதி என்பன இம்முறை இப்பேரிச்சம்பழங்களை விநியோகித்தவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.