மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது !

IMG_4745

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது.

அந்நாட்டின் ஷென்யாங் விமானத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் லியோனிங் விமானப் பயிற்சிக் கல்லூரியும் இணைந்து வடிவமைத்துள்ள இந்த விமானத்திற்கு BX1E எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதல் இரண்டு விமானங்கள் லியோனிங் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டதாகவும், அவற்றுக்கான உரிமங்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

14.5 மீட்டர் அகல இறக்கைகள் கொண்ட BX1E விமானம், 230 கிலோ கிராம் வரையிலான எடையைச் சுமந்து பறக்கக்கூடியது.

3,000 மீட்டர் உயரத்தில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த விமானத்தைச் செலுத்த முடியும்.

இரண்டே மணி நேரத்தில் இந்த விமானத்தை முழுமையாக மின்னேற்றம் (ரீசார்ஜ்) செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

rx1e-roll-out