விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்தார் ! ( வீடியோ )

A British Airways plane flies intoHeathrow Airport in west London

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணித்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்தார் ! (video)

 விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்த இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு இளைஞர் விமானம் தரையிறங்கியபோது சக்கரத்தில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து லண்டனுக்கு நேற்று முன்தினம் காலையில் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் புறப்படவிருந்த நிலையில், அதற்கு முன்பே இவ்விரு இளைஞர்களும் சக்கரத்துக்குள் ஒளிந்துகொண்டனர்.

அங்கிருந்து சுமார் 11 மணி நேரம் பறந்த விமானம் 12,875 கி.மீ தொலைவு கடந்து மேற்கு லண்டன் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஒரு இளைஞர் 1400 அடி உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்தார்.

வணிக நிறுவனத்தின் கூரை மீது வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விமானம் தரையிறங்கியபோது சக்கரத்தில் ஒளிந்திருந்த மற்றொரு இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயிரிழந்த மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளைஞர்கள் தொடர்பில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.