அல் கிம்மா சமூகசேவை நிறுவனம் அம்பாறை மாவட்டத்துக்கு தனது அலுவலகத்தை விஸ்தரித்தது !

1-2_Fotor

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்

கடந்த 2010 ஆண்டு சமூகசேவையை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் கிம்மா சமூகசேவை நிறுவனம் தனது சேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு நிறுவனம் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட காரியாலயத்தை 2015-06-20ல் கல்முனையில் திறந்து வைத்தது.

அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்டக் காரியாலயத்தை, ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் றஹுமத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து வைத்தார்.

அல் கிம்மா சமூகசேவை நிறுவனம் 2010 ஆண்டு முதல் ஏழைமக்களுக்காக பாரியளவில் உதவிகளை செய்து வருகின்றது. இனமத வேறுபாடின்றி சேவையாற்றி வரும் இந்நிறுவனத்தின் ஊடாக குடிநீர் வசதிகளை மட்டும் சுமார் 60000 பேர் பெற்றுள்ளதுடன் மின்சார இணைப்புகள், வீட்டுத்திட்டம், ஏழை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவிகள், உலர் உணவுப்பொருட்கள், இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளானவர்களுக்கான உதவிகள் குறிப்பாக பதுளையில் இடம்பெற்ற அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி, அளுத்கமை வேர்வலை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் கூரைதகடுகள் போன்ற அநேக உதவிகளை அல் கிம்மா சமூகசேவை நிறுவனம் செய்து வருகின்றது.

றஹுமத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து வைக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியாலய திறப்பு விழாவின்போது, உலமா கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், எம்.எஸ். உமர் அலி, ஏ.எல்.எம். முஸ்தபா, முன்னாள் பிரதேசசபை தலைவர்களான அஷ்ரப் தாஹிர், எம்.ஏ.அன்சில் போன்றோருடன் காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், அல் கிம்மா சமூகசேவை நிறுவனத்தின் சார்பில் பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர், கணக்காளர் ஏ.எல்.இஸ்ஸடீன், நிருவாக உத்தியோகத்தர் எம்.யூ.பஸீர், திட்டப்பணிப்பாளர் எம்.ஐ.நவாஸ், ஊடக இணைப்பாளர் எம்.இசட். இஸ்மத் ஆகியோரும் பெரும்திரளான பிரதேச மக்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது சில பயனாளிகளுக்கு நீரினைப்பினை பெறுவதற்கான சான்றிதள்களும் வழங்கி வைக்கப்பட்டது.

a_Foto Fotor