கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கம் தோற்கடித்தபோதும் அவர்களுக்கான நிதியுதவிகள் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2014ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும் இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ.யினர் தமது சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தியும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள தமிழ் டயஸ்போராக்களின் உதவியுடனும் தமக்கு தேவையான ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் வேறு தேவைகளை பெற்றுக் கொள்வதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.