அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிட்டட்டின் பணிப்பாளராக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் நேற்று வியாழக்கிழமை அமைச்சரினால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.