முதலமைச்சர் ஊடகப்பிரிவு
சம்பூர் காணிப்பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களின் குறைகளைத் தீர்த்து அக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண ஆளுணர் முன்னின்று செயல்படும் விதம் பாராட்டுக்குரியது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் தெரிவித்தார்.
அவ்வேளையில் அம்மக்களுக்கு சிறந்த தீர்வினை வழங்க கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோ எடுத்த வழிமுறைகள் பாராட்டுக்குரியது.
பரந்த சிந்தனையுடன் செயல் படும் ஆளுணரின் இந்நடவடிக்கை போன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் சகல வேலைப்பாடுகளிலும் இனிமேலும் ஒத்துளைப்பு வழங்குவார் என்ற நம்பிக்கை இன்று ஏற்பட்டுள்ளது.
இதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதற்கான சகல முயற்சிகளையும் கிழக்கின் முதலமைசார் என்ற வகையில் நான் முன்னெடுத்துவருகிறேன். மேலும் இவ்வாறான நற்செயற்பாடுகளே நிரந்தர தீர்வொன்றைப் பெறுவதற்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறிக்கொள்வதுடன்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மட்டக்களப்பு மாவட்டப் பிரச்சனைகளைத் தொடர்ந்து கூறிவருகின்றார் அவைகளையும் சரியான முறையில் தீர்வுகண்டு அதனையும் நிறைவேற்றிக் கொடுக்க ஆளுணர் சிறந்த பங்களிப்பினை வழங்கவேண்டும், வழங்குவார் என்று நினைக்கிறேன்.
எனவே கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைகளில் இனிமேலும் எந்த தடைகளும் இருக்காது என்ற செய்தியினை தெரிவிப்பதில் நான் சந்தோஷமடைகிறேன். இனிமேலும் கிழக்கில் தடையாக யார் இருந்தாலும் அதனை உடத்தெறிந்து மக்கள் பணியை சரிவர நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் தைரியமாகவும் செயல்பட்டுவருகிறேன் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.