இலங்கையின் பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்கள் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இந்த பழக்கத்திற்குள்ளாகியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் இளம் பருவத்தினர் மத்தியில் காணப்படும் புகையிலை சார்ந்த போதைப் பொருள் பாவனை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் பாரதூரமானவை என அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் நிலங்க சமரசிங்க கூறியுள்ளார்.
இந்த அபாயத்திலிருந்து பாடசாலை மாணவர்களை விடுவிப்பதற்காக விரிவான செயற்றிட்டமொன்றை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா