ரஷ்ய அமைச்சர் ஒருவர் 40 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!

 

download (2)40 வருடங்களுக்கு பின்னர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்த வருடம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு சென்றிருந்தபோது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஷி லெவ்ரோவிற்கு அழைப்பு விடுத்ததாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

தமது அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வருகைதருவதற்கு விருப்பம் தெரிவித்தாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைத்தரவுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ரஷ்ய தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளதுடன் முக்கிய உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.