புதிய பாராளுமன்ற தேர்தல் முறை தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும், பாராளுமன்றத் தேர்தலை துரிதமாக நடத்த முடியாதென தேர்தல் திணைக்களப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தேர்தல் தொகுதி மீள் நிர்ணயம் செய்த பின்னர் புதிய முறையின் கீழ் பொதுத் தேர் தலை நடத்த முடியாதென்ற கருத்து நில வினாலும் பாராளுமன்றத் தேர்தல் சட்டமூலம் இதற்கு தடையாகவிருப்பதாகவும் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் வேட்புமனு கோரல், தேர்தல் நடத்துவது, வாக்குகளை எண்ணுவது மற்றும் தெரிவு செய்யப்படுபவர்களை அறிவிப்பது போன்ற பிரிவுகள் திருத்தப்பட வேண்டுமெனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.