எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக போட்டியிடுவதற்காக விண்ணப்பிப்பவர்கள் அந்த விண்ணப்பப்படிவத்துடன் 2,000 ரூபாவை கட்சிக் காரியாலயத்துக்கு செலுத்த வேண்டுமென கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பதாரிகள் அனைவரும் விண்ணப்ப படிவத்துடன் 500 ரூபாவை கட்சிக் காரியாலயத்துக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பப் படிவத்துடன் இவ்வாறு பணம் அறவிடப்படவில்லை எனவும், தெரிவு செய்யப்பட்ட சகல உறுப்பினர்களும் கட்சியின் நிதியத்துக்கு 5 இலட்சம் ரூபா செலுத்த வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான வேலைத்திட்டங்களையும் தீவிர மாக மேற்கொண்டுவருவதாகவும் கட்சி வட் டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.