பிரபாகரனின் ஆயுதங்கள் எங்கே? – கொழும்பு ஊடகம் கேள்வி

 

imagesதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களை யார் வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, பிரபாகரன் பயன்படுத்தி வந்த 9 மில்லி மீற்றர் ரக ஜீலொக் 17 ரக தனிப்பட்ட கைத்துப்பாக்கியை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது தனிப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் யுத்தத்தை வழிநடத்தியவர்கள் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பிரபாகரனின் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் சென்றார்களா? என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் எந்த நேரத்திலும் குறித்த கைத்துப்பாக்கியை தன் வசம் வைத்திருந்தார் எனவும், இந்த ரக கைத்துப்பாக்கி மிகவும் உயர் தரத்திலானதும் விலை அதிகமானதுமாகும் எனவும் தெரியவருகின்றது.

இதற்கு மேலதிகமாக அவர் பயன்படுத்திய ரபைல் ரக துப்பாக்கி ஒன்றையும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலக்கத் தகட்டையும் காணவில்லை என கூறப்படுகின்றது.

பிரபாகரனின் பொருட்கள் காணாமல் போயினவா அல்லது அழிக்கப்பட்டதா அல்லது உயர் அதிகாரிகள் தம்வசம் வைத்திருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்கள் கிடையாது என பாதுகாப்பு உயர் அதிகாரிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

20090519_B041 20090519_B02