இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த வாழ்நாளை அர்ப்பணித்த மூவரை கௌரவிக்கும் நிகழ்வு!

.எல்.ஆசாத்

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த மூவரை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிறு மாலை 04 மணிக்கு கொழும்பு10. மாளிகாவத்தை இஸ்லாமிக் சென்டரில் இடம்பெறவுள்ளது.

தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் சிறுபான்மையினரின்; உரிமைக்காகவும் ௨ள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்துவரும் மூவருக்கே இந்த கௌரவம் வழங்கப்படவுள்ளது.

ஜாதிக்க பல சேனாவின் பொதுச்செயலாளர் வட்டரக விஜித தேரர்

நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கரணாரத்ன

மனித உரிமை ஆர்வலர் ருகி பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பவுள்ளனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம்தமிழ் சமுகங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் மத அடக்கு முறைகள் தொடர்பில் இவர்கள் மூவரும் குரல் கொடுத்து வந்ததுடன் அதற்காக போராட்டங்களையும் நடத்தியுமுள்ளனர்.

தாம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் மனித நேயத்தை பாராட்டியே இவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்படவுள்ளனர்.

சிறூன்மையினர்க்காக குரல் கொடுத்துவரும் இம்மூவரையும் பாராட்டி கௌரவிக்கும் இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றோம்

இனவாதத் தீயை அணைத்திடுவோம்இனவாதத்தை எதிர்க்கும் அனைவரும் ஒன்றுபடுவோம்

ஏற்பாட்டாளர்கள்

சகல மதங்களுக்குமான சமசமுக கூட்டமைப்பு

ஜனநாயகத்தின் குரல்

முஸ்லிம் முற்போக்கு முன்னணி

aa