நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைப்பது அரசாங்கத்தின் கடமை !

 

 

யுத்த கால­கட்­டத்தில் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது. இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பு­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். சிறி­மா-­சாஸ்திரி ஒப்­பந்­தத்­துக்கும் யுத்­தத்தில் தமிழ் மக்கள் வெளி­யே­றி­ய­மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்­பு­ப­டுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

யுத்த கால­கட்­டத்தில் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் கடந்த முப்­பது ஆண்­டு­களில் யுத்­தத்தால் வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் இந்த நாட்­டுக்கு அழைத்து வர­வேண்டும். இந்த மக்கள் தமது உயிரை பாது­காத்துக் கொள்ளும் நோக்­கி­லேயே அக­தி­க­ளாக வெளி­யே­றி­னார்கள். ஆகவே யுத்­த­கா­ல­கட்­டத்தில் வெளி­யே­றிய மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைத்­து­வ­ர­வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது. அதேபோல் இன்று இரட்டை பிர­ஜா­வு­ரிமை கொடுக்க வேண்­டிய கோரிக்­கை­களை எல்லாம் அர­சாங்கம் அங்­கீ­க­ரித்­துள்ள நிலையில் புலம்­பெயர் தமிழ் மக்­களை நாட்­டுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்று தெரி­விப்­பது நியா­ய­மான கருத்­தாக நாம் கரு­த­வில்லை. இவ்­வா­றான கருத்­துக்கள் முழு­மை­யாக இன­வா­தத்தை பரப்­பு­வ­தா­கவே நாம் கரு­து­கின்றோம். கடந்த அர­சாங்கம் இன­வா­தத்தை கக்­கி­ய­மையின் கார­ணத்­தி­னா­லேயே இன்று மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் இந்த அர­சாங்­கமும் இன­வா­தத்தை கையாள்­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல.
மேலும் சிறி­மா-­ – சாஸ்திரி ஒப்­பந்தம் மூலம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை வேறு விட­ய­மாகும். இரண்டு நாடு­க­ளி­னதும் அன்­றைய அர­சாங்­கங்­களின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தின் மூலம் நடை­பெற்ற சம்­ப­வங்­களும் யுத்­தத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்­ததும் ஒன்­றாக முடி­யாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர்.
சொத்­துக்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து தமது நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். மக்களுக்கு மீண்டும் அவர்களது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்