மகிந்தவையும் இணைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!

downloadமக்களின் ஆத­ர­வி­ருக்கும் மஹிந்­தவை இணைத்துக் கொண்டு நாட்டில் மீண்டும் சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­துவோம். ஐ.தே. கட்­சியை வீட்­டுக்கு அனுப்­புவோம் என எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் எம்.பி.யுமான ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­தார்.

 

ஜே.வி.பி. யின் ”மணி” இன்று யானையின் கழுத்தில் கட்­டப்­பட்டு அடி­மை­யாகி விட்­டது என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

இது தொடர்­பாக ஜோன் சென­வி­ரத்ன எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிரச்­சி­னைகள் முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­யுள்­ளன. அதனை எமது கட்­சிக்குள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி சுமு­க­மாக தீர்த்துக் கொள்வோம்.
அது தொடர்பில் வேறு கட்­சிக்­கா­ரர்கள் கவ­லைப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஐ.தே. கட்­சிக்குள் 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக பல பிரச்­சி­னைகள் காணப்­பட்­டன.

கட்சித் தலை­வ­ருக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக போர்க்­கொடி உயர்த்­தி­னார்கள். இன்றும் ஐ.தே.கட்­சிக்குள் முரண்­பா­டுகள் புகைந்து கொண்­டுதான் இருக்­கின்­றன.
ஜே.வி.பி. க்குள்ளும் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கி­யுள்­ளன. முன்னாள் தலை­வரும் கட்சி ஆலோ­ச­கரும் கட்­சியை விட்டு வெளி­யேறி ஜே.வி.பி. யை கடு­மை­யாக விமர்­சிக்­கின்றார். ஜே.வி.பி.யின் மணி இன்று யானையின் கழுத்தில் கட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­வர்கள் தான் சுதந்­திரக் கட்­சியை விமர்­சிக்­கின்­றனர். நிழலைப் பார்த்து நாய் குரைப்­பதால் எது­வுமே நடை­பெறப் போவ­தில்லை. நிலவு கீழி­றங்கி வரப் போவ­து­மில்லை.
எனவே எவ­ரது விமர்­ச­னத்­திற்கும் நாம் கவ­லைப்­பட போவ­தில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இன்­னமும் மக்கள் ஆத­ரவு உள்­ளது. எனவே மஹிந்­த­வையும் ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சே­ன­வையும் இணைக்கும் முயற்­சி­களை மேற்­கொள்வோம்.

மஹிந்த தலை­மையில் பொதுத் தேர்­தலில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியை வெற்றி பெறச் செய்வோம்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்குவோம். இது நிச்சயம் என்றும் ஜோன் செனவிரத்ன எம்.பி. தெரிவித்தார்.