முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ரவிராஜ் கொலை தொடர்பில் கடற்படையினர் உள்ளிட்ட ஐவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றய தினம் அது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெரணான்டோவிடம் மேலதிக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த குற்றப்புலனாய்வு பிரிவினர் முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும 19 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பிலான வழக்கு மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.