நிந்தவூரில் இரண்டாவது முறையாக இடம்பெறும் மின்னொளி உதைபந்து போட்டி..!

சுலைமான் றாபி

நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 23வது வருட நிறைவையொட்டி நிந்தவூரில் இரண்டாவது முறையாக நடாத்தும் மாபெரும் மின்னொளி உதைபந்துப் போட்டி நேற்று (05) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். நவாஸ் தலைமையில் ஆரம்பமான அங்குரார்ப்பன போட்டியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமா லெவ்வை, அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட்,  நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன், காரைதீவு பிரதேச செயலக உதவி மாவட்டப் பதிவாளர் ஏ.எம். கலீல், மௌலவி ஐ. இப்ராஹிம், ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எம். முஸ்தபா, நிந்தவூரின் விளையாட்டு முதுசம் ஆசிரியர் கே.எல். நூர் முஹம்மட், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் உள்ளிட்ட அதிதிகள் இவ்வுதைப்பந்தாட்ட அங்குராப்பன நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களைப் பிரதினிதுவப்படுத்தும் 12 அணிகள் கலந்து கொண்டதோடு இந்த சுற்றுப் போட்டி நேற்று (05.06.20150 முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

இதேவேளை நிந்தவூர் கென்ட் அணியும், அக்கரைப்பற்று லெவன் ஏ.கே.பி. அணிகளுக்கிடையிலான முதல்நாள் இந்தப் போட்டியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கோள் ஒன்றினை செலுத்தி ஆரம்பித்து வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_5662_Fotor_Collage_Fotor