தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக சில வதந்திகள் பரவி வருகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்த ஆணையாளரின் பேச்சாளர் ஒருவர், காய்ச்சல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.