முதலிடத்தில் கொழும்பு …!

 

images (3)உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சிறிலங்கா தலைநகர் கொழும்பு முதலாவது இடத்தில் உள்ளதாக, மாஸ்டர் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொழும்பு முதலிடத்தில் உள்ளது. ஆசியாவில் உள்ள 7 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

21 வீத புள்ளிகளுடன் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் செங்டு நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அபுதாபி மூன்றாவது இடத்திலும், ஜப்பானின் ஒசாகா நான்காவது இடத்திலும், ரியாத் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து, சியான், தைபே, ரோக்கியோ, லிமா, ஹோசிமின் சிற்றி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.