நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை அவசரமாக நாம் வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்திற்கு வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கட்டணச் சலுகை தரும் வாகனங்களை கொண்டு வரவில்லை.
ஆனால் வாகன இறக்குமதியை ஒரு சரியான முறைக்கு உட்பட்டு, நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், எமது டொலர் தொகை வெளியேறாத வகையில், வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய, அந்த வாய்ப்பை வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.