தேசிய காங்கிரஸ் நின்று நிதானித்து களமாடும் புரவிப்படை வீரர்களை அணிவகுத்து நிற்குமாறு அக்கறையுடன் அழைக்கிறது

ஒரு நாள் கூத்துக்காக மீசையை அகற்றும் தனி மனித பலவீனம் கொண்டவர்கள் ஓர் அரசியல் போராட்டத்தில் நிலைத்து நிற்க முடியாது.

ஒரு தேசிய இனமாகிய நம்மை “தங்கள் தாயகத்திலிருந்து வெளியேறிய ஒரு குழு”என்று நமக்குத் தலைமை தாங்கியவர்களே எழுதிக்கொடுத்து
விட்டு கடந்து சென்ற ஒரு சூழலில்,

புலிகளின் மிலேச்சத்தனமான செயல்களை பகிரங்கமாகக் கண்டித்து அதற்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடிய தேசிய காங்கிரஸின் தலைமையை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.

தேசிய காங்கிரஸின் அபிவிருத்தி மழையில் நமது கிழக்கு மண்ணும் நாடும் கண்ட முன்னேற்றத்தை நாம் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் நமது ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பாரளுமன்றத்தில் நகர்த்திய சட்டவாக்க ரீதியிலான போராட்டத்தை நம்மில் யாரும் மறுக்க முடியாது.

அவை பழங்கதை எனினும் யாவும் நம்கதைதான் காலம் எத்துணை விசித்திரமானது.

தேசிய காங்கிரஸில் முகவரி பெற்றுவிட்டு இதர காங்கிரஸ்களில் சவாரி செய்யும் நம் சகபாடிகளே!

கிழக்கின் அரசியலை மீளமைக்க உருவாக்கிய தேசிய காங்கிரஸில்,அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக தேசிய காங்கிரஸில் இணைகின்ற போது அதன் கொள்கைப்பிடிப்பின்மீதுதான் இணைந்து பயணித்தீர்கள்.

வீசிய பல அரசியல் புயல்களிலும் கிழக்கின் அரசியலில் நிலைத்து நின்று தான் சார்ந்த சமூகத்தை நமது பூமியின் மக்களை வழிநடாத்தும் பணியில் நாம் எதுவரை பயணித்தோம் என்பது நமது மனச் சாட்சிகளுக்குத் தெரியும்.

நாம் கடித்த கனியின் மீதியை இன்னொருவர் சாப்பிட விரும்புவதில்லை ஆக நாம் தொடங்கிய பணியை நாம்தான் முடித்துக் காட்ட வேண்டும்.

நமது இயலாமையின் சுமை மூட்டையை தலைமையின் மீது சுமத்திவிட்டு, இதர காங்கிரஸ் கட்சியின்  தலைமைகளைக் காெண்டாடி மகிழும் ஈனச் செயலை கிழக்கின் தன்மானமுள்ள தாய்மார்கள் விரும்புவதில்லை.

தேசிய காங்கிரஸால் மாநகரசபை முதல்வரானவர்கள் அங்கத்தவர்களாக ஆனவர்கள் மாகாண
சபைகளை அலங்கரித்தவர்கள் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர்கள் என்று ஓர் நீண்ட பட்டியலை பார்த்தால் அவர்களை கிள்ளுக்
கீரைகளாகப் பயன்படுத்திவிட்டு நகர்வார்கள்;

அல்லது தேர்தல் காலக் களியாட்டங்களுக்கு குர்பான் கொடுத்துவிட்டு நடையை கட்டி விடுவார்கள்.

அடிமைகளால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது குதிரைகள் தாகம் மிகைத்தாலும் மாசடைந்த நீரை அருந்துவதில்லை எதிர்வரும் பொதுத் தேர்தல் களம் நமக்குப்பல சேதிகளை மிக விரைவில் ஆரூடம் சொல்லும்மறைந்த  தலைவர் அஷ்ரப் அவர்களின் வருகையை அவசியமாக்கிய முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னரான அரசியல் களத்தை எதிர்வரும் பொதுத் தேர்தல் தெளிவாக ஞாபகமூட்டும்.

தொப்பி புரட்டும் இதர காங்கிரஸ்கள் தடுமாறுகின்றன அங்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் அணிமாறும் காட்சிகள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன.

தே.கா நின்று நிதானித்து களமாடும் புரவிப்படை வீரர்களை அணிவகுத்து நிற்குமாறு அக்கறையுடன் அழைக்கிறது. நமக்காகத் தைத்த ஆடைகளே நமக்கானது.

ஆளும் கட்சி என்பதற்காக நமது மண்ணின் அரசியலை முழுமையாகப் பிரதிபலிப்பார்கள் என்று நாம் மனக் கோட்டை கட்ட முடியாது;

அவர்களை ஆழம்பார்க்க அளவுகோல்கள் அவசியம் காலம் கண்ணாடியாய் அவற்றை பதிவு செய்யும்.

அநுபவம் கொண்ட தலைமையினைஆற்றல்கொண்ட இளைஞர்கள் வலுவூட்ட முன்வரும்போது நமது இலக்கினை அடைவது இலகுவானதே.

சுயவிசாரணை செய்யத் தெரிந்தவர்கள்
தேசிய காங்கிரஸின் இருப்பின் அவசியத்தை நன்கறிவார்கள்

இதர காங்கிரஸ்கள் வழக்கொழிந்து செல்லும்
வேளையில்,

இன்ஷா அல்லாஹ்
தேசிய காங்கிரஸ் அதன் பயணத்தை தன்னம்பிக்கை யுடன் சீராகத்தொடரும்.

சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா