முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களுக்கு கட்சிக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலை வழங்குங்கள்.
கட்சிக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலை ஹிருணிகாவுக்கு கொடுங்கள் என்று சொல்வதற்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு அருகதை இல்லை என்பதுடன் இந்த வாதம் அரசியல் ரீதியாக மிகவும் முட்டாள்தனமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒப்பந்தத்தின்படி வெற்றிடமாகும் தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட வேண்டும் எனும் நிபந்தனை இடப்பட்டு செய்யப்பட்டது.
அந்த வகையில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்களது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தால் வறிதாக்கப்பட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்புரிமை ஒப்பந்தப்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமாகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சொந்தமாகும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களுக்கு வழங்குவது என்னை பொறுத்த அளவில் சாலப் பொருத்தமான ஒரு விஷயமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் ஏனைய இரண்டு உறுப்பினர்களும் கட்சியினதும் தலைமையினதும் பாரிய அதிருப்தியினைச் சம்பாதித்திருக்கும் இந்த நிலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களை பலப்படுத்துவதன் ஊடாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலை கட்சி உத்வேகத்துடன் எதிர் கொள்ள முடியும்.
#அரசியலுக்கு_அப்பால்_சம்மாந்துறையைச்_சேர்ந்த_ஒரு_மகனாக_இந்த_பதிவை_எழுதுகிறேன்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களுடைய அரசியல் மீது தனிப்பட்ட ரீதியில் மிகப்பெரிய அதிருப்தி எனக்கு இருந்தாலும் சம்மாந்துறையைச் சேர்ந்த மகன் என்னும் வகையில் இந்த முன்மொழிவைச் செய்வதில் நியாயம் இருப்பதாக உணர்கிறேன்.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு தேவையில்லை என்பதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இருணி பிரீம சந்திரன் அவர்களுக்கு கொடுக்க தான் சஜித் பிரேமதாசர் அவர்களிடம் சிபாரிசு செய்து இருப்பதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அவ்வாறான அறிக்கையை அவர் வெளியிடுவதற்கு எந்த அருகதையுமற்றவர் என்பதே என்னுடைய அபிப்பிராயம்.
அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் குறித்த தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஆனதாகும் என்பதே. இந்த வாதம் அரசியல் ரீதியாக மிகவும் முட்டாள்தனமானது.
இரண்டு மாதம் அல்ல இரண்டு நாட்களாக இருந்தாலும் நமது மக்களுடைய வாக்கு பலத்தால் அந்த வாக்கு பலம் கட்சிக்கு கொடுத்த அங்கீகாரத்தால் இயற்கையாகவே உரித்தாக்கப்பட்ட குறித்த தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் ஒரு நாளாக இருந்தாலும் கட்சியையும் கட்சிக்கு வாக்களித்த மக்களையும் கௌரவப்படுத்தும் விதமாக கட்சியில் யாரோ ஒருவருக்கு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
இரண்டு மாதம் தானே அது வேண்டாம் என்று சொல்வதற்கு கட்சிக்கும் அல்லது கட்சியில் இருக்கும் எவருக்கும் உரிமை இல்லை.
சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களுக்கு அதை பெறுவதற்கு விருப்பம் இல்லாவிட்டால் அதை பெற விருப்பம் உள்ள யாரோ ஒருவருக்கு அது நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
சம்மாந்துறை மகன் எனும் அடிப்படையில் அதை சம்மாந்துறையைச் சேர்ந்த மன்சூர் அவர்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பதில் நான் சந்தோஷம் அடைகிறேன்.
றனூஸ் இஸ்மாயில்
சம்மாந்துறை