ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்த ஹரீன் பெர்னாண்டோ அவர்களை கட்சி நீக்கியமை, சட்டத்திற்குட்பட்டது என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது . இதனைத் தொடர்ந்து ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் கட்சியின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .