ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணிலுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என மொட்டுக் கட்சியின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.