யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை விரைவில்..!

யாழ்ப்பாணம்சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர். இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம்.

மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

மேலும் யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றும் தெருவித்தார்.