ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை காணப்படுவதாகவும், அதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை புறந்தள்ளி, சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கையே காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சிங்களத் தலைவர்களும், அரசாங்கமும் புரிந்துகொள்ளாத வரையில் நாடு முன்னோக்கிப் பயணிப்பது சாத்தியமாகாத விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை காணப்படுவதாகவும், அதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.