கடந்த மாதம் 27ம் திகதி முதல் தம்மை சந்தித்தவர்கள் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு கோரியுள்ளார்.

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

 விவசாய அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நாளைய தினம் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது. இன்று மாலை வேளையில் தமக்கு ஏற்பட்ட கடுமையான தலைவலி காரணமாக தாம் என்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதாகவும் இதில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் அமைச்சர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கடந்தமாதம் 27ம் திகதி முதல் தம்மை சந்தித்தவர்கள் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு கோரியுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பெருந்தொற்று நிலைமையின் போது அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதே பொருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.