சீன அரசு, வூஹானில் உள்ள 1.2 கோடி குடிமக்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

கோவிட் வைரஸ் பரவல் முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில் டெல்டா வகை கோவிட் வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதால் அங்குள்ள 1.2 கோடி பேருக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில், கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கோவிட் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கோவிட் அலைகள் உருவாகி உலகையே உலுக்கி வருகிறது. ஆனால், சீனாவில் கோவிட் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்தது.

இந்நிலையில் தற்போது, ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் டெல்டா கோவிட் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவிட் வைரஸ் பரவல் முதலில் கண்டறியப்பட்ட வூஹானில் டெல்டா கோவிட் வைரசின் பரவல் அதிகரித்து உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ள சீன அரசு, வூஹானில் உள்ள 1.2 கோடி குடிமக்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதை வூஹானின் மூத்த அதிகாரி லீ உறுதி செய்துள்ளார்.