கொரோனா தொற்றுநோயை எதிர்ப்பதில் இலங்கையர்கள் அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் -வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609503884084"}

புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுவதை விட கோரோனா தொற்றுநோயை எதிர்ப்பதில் இலங்கையர்கள் அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரும் சுகாதாரசேவையின் முன்னாள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இன்று தெரிவித்தார்.

விஞ்ஞான முறைகள் இருந்தபோதிலும், நாட்டில் சிலர் புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.

தற்போதைய நிலையில் இலங்கையர்கள் புராணங்களைப் பின்பற்றாமல்,கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான விஞ்ஞான முறைகளைப் பின்பற்றவேண்டும். கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை நாட்டில் சிலர் விஞ்ஞான முறைகளில் தங்கள் நம்பிக்கையை செலுத்துகின்றனர். எனினும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் பல அறிவியல் முறைகள் இருந்தபோதிலும், புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர் என்று அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டுமானால் கொரோனா தடுப்பூசிகள் குறைந்தது 70வீதமான மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். உற்பத்தியாளர்கள் 20வீதமான தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள்.

உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை வாங்க முயற்சிக்கும். எனவே, இலங்கைப் போன்ற நாடுகள் அவற்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும், இதேவேளை தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விரைவுபடுத்த வேண்டும்.

இல்லையெனில் ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை கிடைக்காமல் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இது ஒரு தடையாக மாறிவிடும் என்று வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.