பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1609430766016"}
2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அரசாங்கம் எட்டியுள்ளது.

கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அதேவேளை, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்கி முழு உலகிற்கும் இலங்கையால் முன்மாதிரியொன்றை வழங்க முடிந்துள்ளது.

நாட்டில் காணப்பட்ட மருந்து மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஆனால், இறக்குமதி செய்யப்பட்டு வந்த மருந்துப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானம் முக்கியமான விடயமாகும்.

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் செலவிடும் கோடிக் கணக்கான வெளிநாட்டுப் பணத்தை இதன் மூலம் சேமித்துக்கொள்ள முடிந்துள்ளது.

நட்டமடைந்து காணப்பட்ட பல கைத்தொழில்களை வழமைக்குக் கொண்டு வந்து உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நட்டத்தில் இயங்கிய மில்கோ நிறுவனம் இந்த வருடம் பெற்றுள்ள வருமானம் 40 கோடி ரூபாவைத் தாண்டுகின்றது.

மூடப்பட்டிருந்த கடதாசி தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உற்பத்திகளை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தி, மட்பாண்ட உற்பத்தி, கைப்பணி உற்பத்தித் துறைகள் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென தனியான ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சிகளை கட்டியெழுப்புவதற்காக நான்கு சதவீத வட்டியின் கீழ் கடன் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு முக்கிய ஏற்பாடாகும். பத்து லட்சம் மரக்கன்றுகளை நடுதல், 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடுகளை அமைத்தல், நாட்டின் முதலாவது காற்றுவலு மின்நிலையத்தை அமைத்தமை போன்ற நடவடிக்கைகள் இந்த வருடத்தில் எட்டியுள்ள முக்கிய முன்னெற்றங்களாகும்.

ஜனாதிபதியின் கிராமத்துடன் உரையாடல் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கிராம மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடிகின்ற அதேவேளை, அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் துணையாக அமைந்துள்ளது. அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக 2020ஆம் ஆண்டில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் பயன்களை எதிர்வரும் வருடங்களில் மக்கள் பெற்றுக்கொள்வார்கள்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)